Wikiversity
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
ஆண்டு 1828 (MDCCCXXVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
- பெப்ரவரி 22 – பேர்சியாவிடம் இருந்து கிழக்கு ஆர்மீனியாவை உருசியா கைப்பற்றியது.
- ஏப்ரல் 14 - நோவா வெப்ஸ்டர் தனது அகரமுதலியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.
- ஏப்ரல் 26 – பிரேசிலும் டென்மார்க்கும் தூதரக உறவை ஏற்படுத்தின.
- சூன் 3 - சிமோன் பொலிவார் பெரு மீது போரை அறிவித்தார்.
- சூன் 23 – போர்த்துக்கல்: இரண்டாம் மரீயா அரசி தனது மாமன் முதலாம் மிகுவெல் அரசனினால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.
- ஆகத்து 27 – உருகுவேயின் விடுதலையை பிரேசில், அர்ச்செண்டினா நாடுகள் அங்கீகரித்தன. சிமோன் பொலிவார் பெர்ம் கொலம்பியாவின் சர்வாதிகாரியாகத் தன்னை அறிவித்தார்.
- ஆகத்து 27 - உருசியப்படை "அக்கால்சிக்" என்ற இடத்தில் துருக்கியப் படைகளை வென்றது.
- செப்டம்பர் 29 – வர்னா (இன்றைய பல்கேரியாவில்) நகரை உருசிய இராணுவத்தினர் துருக்கியரிடம் இருந்து கைப்பற்றினர்.
தேதி அறியப்படாதவை
- உலகின் முதலாவது மின் விசைப்பொறியை ஆனியோசு ஜெட்லிக் என்பவர் உருவாக்கினார்.
- சப்பானில் கியூசூ நகரில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் இறந்தனர்.
- பிரேசில், ரியோ டி ஜெனய்ரோ நகரில் 32,000 அங்கோலியர்கள் விற்கப்பட்டனர்.
- யாழ்ப்பாணம் நாயன்மார்க்கட்டு மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
- மே 8 - ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் (இ. 1910)
இறப்புகள்
1828 நாட்காட்டி
மேற்கோள்கள்
- ↑ Clements, Nicholas (2014). The Black War. Brisbane: University of Queensland Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-70225-006-4.
- ↑ "A Well-Wisher" (William Walton) (1828). Portugal; or, Who is the lawful Successor to the Throne?. London: John Richardson. p. 126.
- ↑ Lynch, John (2007). Simón Bolívar: A Life. New Haven: Yale University Press. p. 233.