LIMSwiki
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1478 (MCDLXXVIII) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- சனவரி 14 – வெலிக்கி நோவ்கோரோத் நகரம் மாசுக்கோவின் இளவரசர் மூன்றாம் இவானிடம் சரணடைந்தது.
- பெப்ரவரி 18 – கிளாரன்சின் முதலாம் கோமகன் ஜோர்ஜ் பிளான்டகெனெட் அவரது மூத்த சகோதரர் இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட் மன்னருக்கு எதிராக சதியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு இலண்டன் கோபுரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
- நவம்பர் – எத்தியோப்பியாவின் மன்னராக எசுக்கான்டர் தனது ஆறாவது அகவையில் முடிசூடினார்.
- நவம்பர் 1 – எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை ஆரம்பமானது.
- திசம்பர் 28 – கியோர்னிக்கோ என்ற இடத்தில் சுவிட்சர்லாந்து படைகள் மிலன் படைகளைத் தோற்கடித்தன.
- லோரென்சோ டெ மெடிச்சி புளோரன்சின் ஆட்சியாளரானார்.
- உள்நாட்டுப் போரை அடுத்து, தெமாக் சுல்தானகம் மயாபாகித்திடம் இருந்து பிரிந்தது.
- பொகீமியாவின் இரண்டாம் விளாதிசுலாவ் அங்கேரியுடன் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.
- யாழ்ப்பாண மன்னர் கனகசூரிய சிங்கையாரியனின் ஆட்சி முடிவடைந்தது. சிங்கை பரராசசேகரனின் ஆட்சி ஆரம்பமானது.
பிறப்புகள்
- பெப்ரவரி 7 – தாமஸ் மோர், ஆங்கிலேய அரசியல்வாதி, மனிதநேயவாதி (இ. 1535)
- சூர்தாசர், இந்திய ஞானி, புலவர்
இறப்புகள்
- முதலாம் திம்மராச உடையார், மைசூர் மன்னர்