LIMSwiki
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1859 (MDCCCLIX) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- ஏப்ரல் 20 - சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்டது.
- மே 21 - பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.
- மே 30 - சார்டீனியர்கள் ஆஸ்திரியப் படைகளை பாலெஸ்ட்ரோ என்ற இடத்தில் தோற்கடித்தனர்.
- ஜூன் 6 - குயீன்ஸ்லாந்து பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக அமைக்கப்பட்டது.
- ஜூன் 24 - சார்டீனிய இராச்சியம் மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகளும் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.
- ஆகஸ்ட் 27 - பென்சில்வேனியாவின் டிட்டுஸ்வில் என்ற இடத்தில் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது எண்ணெய்க் கிணறு எட்வின் டிறேக் என்பவரால் தோண்டப்படட்து.
- அக்டோபர் 26 - வேல்சில், ஆங்கிலெசி என்ற இடத்தில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 454 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 24 - சார்ல்ஸ் டார்வின் தனது உயிரங்களின் தோற்றம் நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின.
நாள் அறியப்படாதவை
- பெப்ரவரி - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக கத்தோலிக்க நூலகம் ஒன்று செமேரியா ஆயரினால் அமைக்கப்பட்டது.
- நவம்பர் - யாழ்ப்பாணத்தில் தமிழில் சிறுவர் இதழ் பாலியர் நேசன் வெளிவந்தது.
- தமிழ் புளூட்டாக், தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.
- யாழ்ப்பாண நகரத்தின் மக்கள் தொகை 28,500 ஆக மதிப்பிடப்பட்டது.
- திமோர் தீவு போர்த்துக்கலுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பங்கிடப்பட்டது.
பிறப்புகள்
- மே 22 - ஆர்தர் கொனன் டொயில், ஆங்கில எழுத்தாளர் (இ. 1930)
- சூலை 7 - இரட்டைமலை சீனிவாசன், இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி (இ. 1945)
இறப்புகள்
1859 நாட்காட்டி
மேற்கோள்கள்
- ↑ "JOSÉ MARIANO SALAS". Calderon Presidencia de la Republica (in ஸ்பானிஷ்). Archived from the original on June 8, 2019. பார்க்கப்பட்ட நாள் June 8, 2019.
- ↑ "Miguel Miramón". Presidentes.mx (in ஸ்பானிஷ்). Archived from the original on June 8, 2019. பார்க்கப்பட்ட நாள் June 8, 2019.
- ↑ Northern Railway of India. "History Of Northern Railway". Archived from the original on 2006-02-02. பார்க்கப்பட்ட நாள் 2006-03-03.