LIMSpec Wiki
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1630 (MDCXXX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- பெப்ரவரி 22 - அமெரிக்கத் தொல்குடியினர் ஆங்கிலேயக் குடியேறிகளுக்கு சோளப்பொரியை அறிமுகப்படுத்தினர்.
- மார்ச் 3 - டச்சு மேற்கிந்தியக் கம்பனியின் கப்பற்படையினர் ரெசிஃபி நகரைப் போர்த்துக்கீசரிடம் இருந்து கைப்பற்றினர். டச்சு பிரேசில் நிறுவப்பட்டது.
- மார்ச் 22 - மாசச்சூசெட்ஸ் குடா குடியேற்றத் திட்டத்தில் விளையாட்டுச் சீட்டுக்கட்டுகள், தாயக் கட்டைகள் போன்றவை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டது.
- சூலை - இத்தாலியில் பரவிய கொள்ளை நோய் வெனிசு நகரை அடைந்தது.
- செப்டம்பர் 7 - பாஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.[1]
- பிரித்தானியர் பரமாரிபோவில் (சுரிநாம்) குடியேறினர்.
- இரண்டு மில்லியன் மக்கள் இறப்புக்குக் காரணமான தக்காணப் பஞ்சம் இந்தியாவில் ஆரம்பமாகியது. இரண்டு ஆண்டுகள் வரை நீடித்தது.
- மாலாயாவின் அசாகான் சுல்தானகம் ஆரம்பம்.
பிறப்புகள்
- பெப்ரவரி 19 - பேரரசர் சிவாஜி, மராட்டியப் பேரரசை உருவாக்கியவர் (இ. 1680)
இறப்புகள்
- நவம்பர் 15 - யோகான்னசு கெப்லர், செருமானிய வானியலாளர் (பி. 1571)
- வில்லெம் ஜான்சூன், டச்சு கடற்பயணி, குடியேற்ற ஆளுநர் (பி. 1570)
மேற்கோள்கள்
- ↑ "Historical note". Archives Guide - Town of Boston. City of Boston. பார்க்கப்பட்ட நாள் 2013-03-20.