LabLynx Wiki
உள்ளடக்கம்
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2007 (MMVII) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டாகும். இது ஒரு நெட்டாண்டு அல்ல.
தமிழ் நாட்காட்டி: ஏப்ரல் 13 வரை விய ஆண்டும். ஏப்ரல் 14 இலிருந்து சர்வசித்து ஆண்டும் ஆகும்.
திருவள்ளுவர் ஆண்டு: ஜனவரி 15 வரை 2037. ஜனவரி 16 இலிருந்து 2038.
நிகழ்வுகள்
ஜனவரி 2007
- ஜனவரி 19: இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியது.
- ஜனவரி 15: முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசேனின் உறவினர் பர்சான் இப்ராகிம், முன்னாள் ஈராக்கிய பிரதம நீதிபதி அவாட் ஹமெட் ஆகியோர் 1982 ஆம் ஆண்டில் 148 ஷியைட் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் உடந்தையாக இருந்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
- ஜனவரி 6: இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.
- ஜனவரி 5: இலங்கை, கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
- ஜனவரி 2: இலங்கை, மன்னார் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 40 பேர் படுகாயமும் அடைந்தனர்.
- ஜனவரி 1 - தென் கொரியாவின் பான் கி மூன் ஐநாவின் புதிய செயலாளர் நாயகம் ஆனார்.
பெப்ரவரி 2007
- பெப்ரவரி 27: மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் எறிகணையின் சிதறல்களால் காயமடைந்தனர்.
- பெப்ரவரி 19: இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்றுகொண்டிருந்த புகைவண்டியில் புதுடில்லியில் இருந்து 100கிமீ தொலைவில் பனிபட் என்ற இடத்தில் இரு குண்டுகள் வெடித்ததில் 64 பேர் வரையில் இறந்தனர்.
மேலும் பெப்ரவரி 2007 நிகழ்வுகளுக்கு..
மார்ச் 2007
- மார்ச் 26 - கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
- மார்ச் 13: 2007 துடுப்பாட்ட உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கியது.
- மார்ச் 6: இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் மலேசியா, மற்றும் சிங்கப்பூர் வரை உணரப்பட்டுள்ளது.
- மார்ச் 1 - இலங்கை விமானப் படையின் பிரி-06 ரக பயிற்சி விமானம் அநுராதபுரம் அருகில் வீழ்ந்து நொருங்கியதில் அதன் பயிற்சியாளரும் பயிற்சி பெற்ற விமானியும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
மேலும் மார்ச் 2007 நிகழ்வுகளுக்கு..
ஏப்ரல் 2007
- ஏப்ரல் 2 - சொலமன் தீவுகளில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலைத் தாக்கங்களில் 15 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 3 - சார்க் நாடுகளின் 16வது வருடாந்த உச்சிமாநாடு புது டில்லியில் ஆரம்பமானது.
- ஏப்ரல் 7 - தமிழ்நாட்டில் செந்தூரில் நெடுஞ்சாலை அமைப்புக்கென கொண்டுசெல்லப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்று வெடித்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 12 - இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
- ஏப்ரல் 16 - ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் இனந்தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 33 பேர் படுகொலை செய்யப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.
மே 2007
- மே 1 - மெல்பேர்னில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவரை அவ்வமைப்புக்கு நிதி சேகரித்து அனுப்பியமைக்குக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டனர்.
- மே 6 - கென்யாவின் போயிங் விமானம் ஒன்று கமரூனில் வீழ்ந்ததில் 115பேர் மாண்டனர்.
- மே 6 - இலங்கையின் தென் பகுதியில் இடம்பெற்ற பெரும் மழையினாலும் வெள்ளத்தினாலும் 16 பேர் கொல்லப்பட்டும் 125,000 பேர் வீடிழந்தும் உள்ளனர்.
- மே 7 - முன்னர் இந்தியாவுடன் இணைந்திருந்த சிறிய கண்டம் ஒன்று தெற்குக் கடல்களின் அடியில் தமது ஆய்வுக் கப்பலான போலார்ஸ்டேர்ன் (the Polarstern), கண்டுபிடித்துள்ளதாக ஜெர்மனிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- மே 12 - கராச்சியில் முன்னாள் பிரதம நீதியரசர் அல்டாஃப் உசேன் அவர்களுக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 13 - தலிபானின் முன்னணி இராணுவத் தலைவர் முல்லா அப்துல்லா கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
- மே 14 - ரஷ்யாவில் ஓர்ஸ்க் என்னுமிடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10பேர் மாண்டனர்.
- மே 16 - மேற்கு லாவோசில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் தாய்லாந்து, வியட்நாமிலும் உணரப்பட்டது.
- மே 18 - இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இஸ்லாமிய மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 24 - கொழும்பில் இராணுவத்தினரின் பேருந்து மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு நால்வர் காயமடைந்துள்ளனர்.
- மே 24 - யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவின் தென்பகுதியில் உள்ள இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியளித்து, 35 கடற்படையினரைக் கொன்றனர்.
- மே 28 - கொழும்பு இரத்மலானையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 7 இராணுவத்தினர் உட்படப் பலர் காயமடைந்தனர்.
மேலும் மே 2007 நிகழ்வுகளுக்கு..
சூன் 2007
- சூன் 3 - கொழும்பில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- சூன் 3 - தெற்கு சீனாவில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது.
- சூன் 7 - கொழும்பு, வெள்ளவத்தையில் விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கைக் காவற்துறையினர் பலவந்தமாக வெளியேற்றினர்.
- சூன் 8 - அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது.
- சூன் 11 - வங்காள தேசத்தில் கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் 118 பேர் கொல்லப்பட்டனர்.
- சூன் 11 - தெற்கு சீனாவில் வெள்ளம் காரணமாக 66 பேர் பலியாயினர். 600,000 பேர் வீடுகளை இழந்தனர்.
- சூன் 14 - காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்தது. பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அமைச்சரவையைக் கலைத்து நாட்டில் அவசரகாலநிலையை அமுல் படுத்தினார்.
- சூன் 15 - உலகின் மிகவும் நீளமான 34 கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக அமைக்கப்பட்டது.
- சூன் 22 - அட்லாண்டிஸ் விண்கப்பல் கலிபோர்னியாவில் உள்ள வான்படையினரின் எட்வேர்ட்ஸ் தளத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
- சூன் 24 - கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
- சூன் 25 - கம்போடியாவில் PMTair விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.
மேலும் சூன் 2007 நிகழ்வுகளுக்கு..
சூலை 2007
- சூலை 4 - பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் காசாவில் கடத்தப்பட்ட பிபிசி செய்தியாளர் அலன் ஜோன்ஸ்டன் 4 மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
- சூலை 7 - புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. சீனப் பெருஞ்சுவர், ஜோர்டானின் பெத்ரா, பிறேசிலின் ரெடிமர் ஏசு சிலை, பெருவில் உள்ள மச்சுபிச்சு என்ற புராதன கட்டுமானம், மெக்சிகோவின் சிச்சென் இட்சா பிரமிட், இத்தாலியின் கொலாசியம், இந்தியாவின் தாஜ் மகால் ஆகியவை புதிய 7 உலக அதிசயங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.[1]
- சூலை 11 - கிழக்கிலங்கையில் குடும்பிமலை பகுதியை கைப்பற்றியதுடன் கிழக்கிலங்கையை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியது.
- சூலை 11 - பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள செம்மசூதிக்குள் இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றும் முகமாக இராணுவத்தினர் மசூதியின் மீது தாக்குதல் நடத்தியதில் மசூதியின் மதகுரு அப்துல் காஸி உட்பட குறைந்தது 50 பேர் பலியாகினர்.
- சூலை 14 - இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
- சூலை 16 - ஜப்பானில் 6.8 அளவு நிலநடுக்கம் காரணமாக 3 பேர் கொல்லப்பட்டு 33 பேர் காயமடைந்தனர்.
- சூலை 17 - பிறேசிலில் சாவோ பவுலோ என்ற இடத்தில் பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்த 176 பேர் உட்பட 200 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- சூலை 18 - இலங்கை கிழக்குக் கடற்பரப்பில் 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உணரப்பட்டது.
- சூலை 21 - ஹரி பொட்டர் நாவலின் ஏழாவதும் கடைசியுமான ஹரி பொட்டர் அன்ட் த டெத்லி ஹல்லோஸ் உலகெங்கனும் வெளியிடப்பட்டது.
மேலும் சூலை 2007 நிகழ்வுகளுக்கு..
ஆகத்து 2007
- ஆகத்து 1 - ஐக்கிய அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில் மாநிலங்களை இணைக்கும் இண்டர்ஸ்டேட் பாலம் மிசிசிப்பி ஆற்றில் வீழ்ந்ததில் 6 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- ஆகத்து 2 - ரஷ்யாவின் சகாலின் நகரில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
- ஆகத்து 4 - நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய்க் கோளில் அடுத்த ஆண்டில் தரையிறக்கி ஆய்வுகள் மேற்கொள்ளவென பீனிக்ஸ் என்னும் கலத்தை விண்ணுக்கு ஏவியது.
- ஆகத்து 4 - இந்தியா, வங்காள தேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பெரும் வெள்ளப் பெருக்கால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
- ஆகத்து 8 - நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டெவர் விண்ணோடத்தை (படம்) கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.
- ஆகத்து 12 - யாழ்ப்பாணம் தச்சன்தோப்புப் பகுதியில் நிகழ்ந்த கிளைமோர் தாக்குதலில் 4 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டு 13 பேர் படுகாயமடைந்தனர்.
- ஆகத்து 15 - பெருவின் தலைநகர் லீமாவில் இருந்து 300 கிமீ தொலவில் 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் பலத்த சேதம் ஏற்பட்டது. குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
- ஆகத்து 25 - இந்தியா, ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
- ஆகத்து 25 - கிறீசில் இடம்பெற்ற மிக மோசமான காட்டுத்தீயினால் 53 பேர் கொல்லப்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டது.
- ஆகத்து 25 - பல்கேரியாவைச் சேர்ந்த பேத்தர் ஸ்டொய்சேவ் என்பவர் ஆங்கிலக் கால்வாயைக் மிக விரைவில் கடந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தினார்.
மேலும் ஆகத்து 2007 நிகழ்வுகளுக்கு..
செப்டம்பர் 2007
- செப்டம்பர் 2 - இலங்கை இராணுவத்தினர் தாம் மன்னார், சிலாவத்துறையை புலிகளிடம் இருந்து மீட்டெடுத்திருப்பதாக அறிவித்தனர்.
- செப்டம்பர் 4 - சூறாவளி ஃபீலிக்ஸ் நிக்கராகுவாவைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
- செப்டம்பர் 6 - இத்தாலியப் பாடகர் லூசியானோ பவரொட்டி தனது 71வது அகவையில் புற்றுநோய் காரணமாக இறந்தார்.
- செப்டம்பர் 7 - ஏபெக் உச்சி மாநாடு சிட்னியில் ஆரம்பமானது.
- செப்டம்பர் 9 - ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியன்களைத் தாண்டியது.
- செப்டம்பர் 10 - லண்டனில் இருந்து நாடு திரும்பிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு மீண்டும் நாடு கடத்தப்பட்டார்.
- செப்டம்பர் 12 - இந்தோனேசியாவின் சுமாத்திராவின் மேற்குப் பகுதியில் 8.2 ரிக்டர் அளவு நிலடுக்கம் ஏற்பட்டது.
- செப்டம்பர் 16 - தாய்லாந்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 55 வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 89 பேர் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 18 - பெருவில் விண்கல் ஒன்றின் தாக்கத்தினால் நூற்றுக்கணக்கானோர் சுகவீனமடைந்தனர்.
- செப்டம்பர் 18 - மியான்மாரில் ஆயிரக்கணக்கான பௌத்த துறவிகள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு இவர்கள் கலைக்கப்பட்டனர்.
- செப்டம்பர் 19 - ஆதி மனிதர்களின் 4 எலும்புக்கூடுகள் ஜோர்ஜியாவில் கண்டெடுக்கப்பட்டன.
- செப்டம்பர் 24 - 2007 இருபது20 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது.
- செப்டம்பர் 26 - வியட்நாமில் பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 60 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
- செப்டம்பர் 30 - இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற 2007க்கான உலக சதுரங்கப் போட்டிகளில் இறுதி சுற்றில் ஹங்கேரி நாட்டின் பீட்டர் லீக்கோவை வெற்றி பெற்று புதிய உலகச் சாம்பியன் ஆனார்.
மேலும் செப்டம்பர் 2007 நிகழ்வுகளுக்கு..
அக்டோபர் 2007
- அக்டோபர் 15 - தெற்கு இலங்கையின் யால சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் இருந்த இராணுவ முகாம் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர். 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 18 - கராச்சி நகரில் எட்டு ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை ஏற்றிச் சென்ற பார ஊர்தி அருகே இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 138 பேர் கொல்லப்பட்டு 600 பேர் படுகாயமடைந்தனர்.
- அக்டோபர் 22 - வவுனியாவில் இருந்து புறப்பட்ட பெல்-212 வகை உலங்குவானூர்தி ஓன்று அனுராதபுரத்துக்கு 12 கி.மீ. தொலைவில் மிகிந்தலைக்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் இதில் பயணம் செய்த 4 இலங்கை வான்படை வீரர்கள் இறந்தனர்.
- அக்டோபர் 22 - எல்லாளன் நடவடிக்கை: அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் அதிகாலை வான், மற்றும் தரை என நடத்திய இரு முனைத் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டு 14 படையினர், மற்றும் 21 புலிகள் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 22 - தெற்கு கலிபோர்னியாவில் பரவிய பெரும் காட்டுதீயினால் 500,000 பேர் இடம்பெயர்ந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாயின.
- அக்டோபர் 23 - டிஸ்கவரி விண்ணோடம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 7 பேருடன் STS-120 என்ற விண்கப்பலை வெற்றிகரமாக பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையத்துக்கு எடுத்துச் சென்றது.
- அக்டோபர் 24 - சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் 'சாங்-ஒன்று' தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
- அக்டோபர் 25 - சிங்கப்பூரின் முதலாவது ஏ-380 ரக சூப்பர் ஜம்போ விமானம் தனது முதலாவது வர்த்தகப் பயணத்தை சிட்னிக்கு வெற்றிகரமாக முடித்தது.
- அக்டோபர் 26 - ஏபிசி வானொலிச் சேவைகள் இலங்கையில் தடை செய்யப்பட்டன.
- அக்டோபர் 27 - கொங்கோவில் இடம்பெற்ற பெரு வெள்ளம் காரணமாக 30 பேர் கொல்லப்பட்டு 100 பேர் காயமடைந்தனர்.
- அக்டோபர் 29 - ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவியுள்ள எச்.ஐ.வி என்னும் தீ நுண்மம் 1969 இல் ஹையிட்டியில் முதலில் உண்டானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
- அக்டோபர் 29 - தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல இடங்களிலும் இடம்பெற்ற கனத்த மழையினால் 22 பேர் இறந்தனர்.
- அக்டோபர் 31 - யப்பான் ஆப்கானிஸ்தானில் இருந்து தமது கடற்படையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
மேலும் அக்டோபர் 2007 நிகழ்வுகளுக்கு..
நவம்பர் 2007
- நவம்பர் 1 - அட்லாண்டிக் கடலில் உருவான சூறாவளி நொயெல் இதூவரையில் 108 பேரைப் பலிகொண்டு பெர்மூடாவை நோக்கி நகர்ந்தது.
- நவம்பர் 1 - மன்னாரின் உயிலங்குளம், பாலைக்குழி மற்றும் கட்டுரைக்குளம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற சமரில் 25 படையினரும் 7 புலிகளும் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 2 - மெக்சிகோவின் கிரிஜல்வா ஆறு பெருக்கெடுத்து 50 ஆண்டுகளில் காணாத அளவு பாரிய வெள்ளம் ஏற்பட்டதில் 800,000 பேர் வீடற்றவர்களாகினர்.
- நவம்பர் 2 - இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 3 - இந்தோனேசியாவின் சுகிவாராஸ் நகருக்கு அருகில் உள்ள கேலூட் எரிமலை வெடித்தது.
- நவம்பர் 3 - இலங்கையில் இருந்து இரகசியமாக லண்டனுக்கு சென்ற துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணா, போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக லண்டனில் கைது செய்யப்பட்டார்.
- நவம்பர் 7 - பின்லாந்து, ஹெல்சிங்கி நகரில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற சூட்டு நிகழ்வில் 8 பேர் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர்.
- நவம்பர் 7 - பூமியில் இருந்து 41 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள 55 Cancri என்ற விண்மீனின் சுற்றுவட்டத்தில் புதிய கோள் ஒன்றை அமெரிக்க வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
- நவம்பர் 8 - துபாயில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 7 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு 15 பேர் படுகாயமடைந்தனர்.
- நவம்பர் 15 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியினால் 2000 பேருக்கு மேல் இறந்தனர்.
- நவம்பர் 16 - தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.
- நவம்பர் 18 - உக்ரேனில் சசியாட்கோ என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 21 - பப்புவா நியூ கினியின் ஓரோ மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 150 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 22 - இலங்கை அரசாங்கம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.
- நவம்பர் 23 - அன்டார்ட்டிக் பெருங்கடல் பகுதியில் 150 சுற்றுலா பயணிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற "எக்ஸ்புளோரர்" என்ற கனேடியக் கப்பல் ஆர்ஜெண்டீனாவின் தெற்கு செட்லாண்ட் தீவு பகுதியில் பனிப்பாறையில் மோதியதில் கப்பல் மூழ்கியது. பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
- நவம்பர் 27 - இலங்கை கிளிநொச்சி நகரிலிருந்து 25 கிமீ மேற்கில் உள்ள ஐயன்கேணியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 9 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
- நவம்பர் 28 - பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் இராணுவத் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அஷ்ஃபக் பெர்வேஸ் கியானி புதிய இராணுவத் தலைவரானார்.
- நவம்பர் 29 - கரிபியன் தீவுகளில் ஒன்றான வின்ட்வார்ட் தீவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் பதிவானது.
- நவம்பர் 30 - துருக்கியப் பயணிகள் விமானம் ஒன்று துருக்கியின் தென்மேற்குப் பகுதியில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 56 பேரும் கொல்லப்பட்டனர்.
மேலும் நவம்பர் 2007 நிகழ்வுகளுக்கு..
டிசம்பர் 2007
- டிசம்பர் 3 - இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் (படம்) தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.
- டிசம்பர் 5 - அநுராதபுரத்தில் கெப்பிட்டிகொல்லாவ என்ற இடத்தில் பயணிகள் பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டு 23 பேர் படுகாயமடைந்தனர்.
- டிசம்பர் 11 - மன்னாரில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற மோதலில் 20 இராணுவத்தினரும் 3 புலிகளும் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 12 - ஊக்க மருந்து உட்கொண்டதை ஒப்புக் கொண்ட அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை மரியன் ஜோன்சின் 5 சிட்னி ஒலிம்பிக் விருதுகள் திரும்பப் பெறப்பட்டன்.
- டிசம்பர் 17 - பொலீவியாவின் நிர்வாகப் பகுதிகாளான பெனி, பாண்டோ, சாண்டா குரூஸ், தரிஜா ஆகியன நடுவண் அரசிலிருந்து சுயாட்சி மாகாணங்களாகத் தம்மை அறிவித்தன.
- டிசம்பர் 20 - 81 ஆண்டுகள், 7 மாதங்கள், 29 நாட்களை நிறைவு செய்து பிரித்தானியாவை ஆட்சிசெய்த மன்னர்கள், மகாராணிகளில் மிகவும் வயது முதிர்ந்தவரென்ற பெருமையை மகாராணி இரண்டாம் எலிசபெத் பெற்றார்.
- டிசம்பர் 21 - பாகிஸ்தானில் பெஷாவார் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 22 - மன்னார், உயிலங்குளத்தில் இரு முனைகளில் முன்னேற முயன்ற இராணுவத்தினரை விடுதலைப் புலிகள் தாக்கியதில் இடம்பெற்ற சமரில் 17 இராணுவத்தினரும் 3 புலிகளும் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 25 - மேற்கு நேபாளத்தில் தொங்கு பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 15 பேர் கொல்லப்பாட்டு பலர் படுகாயமடைந்தனர்.
- டிசம்பர் 27 - பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ ராவுல்பிண்டி நகரில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
- டிசம்பர் 29 - மன்னாரில் இலங்கைப் படையினரின் பாரியளவிலான முன்நகர்வு நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற சமரில் 20-க்கும் மேற்பட்ட படையினரும் 3 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டதாக புலிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் டிசம்பர் 2007 நிகழ்வுகளுக்கு..
இறப்புகள்
- ஜனவரி 28 - ஓ. பி. நாயர், இந்தித் திரைப்பட இசையமைப்பாளர்
- மே 16 – புலவர் கு. கலியபெருமாள் (பி. 1924)
- சூலை 8 - சந்திரசேகர், முன்னாள் இந்தியப் பிரதமர்
- சூன் 27 - டி. எம். தியாகராஜன், கருநாடக இசைக் கலைஞர் (பி: 1923)
- ஆகத்து 25 - தாதி பிரகாஷ்மணி, பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை ராஜயோகினி
- செப்டம்பர் 6 - லூசியானோ பவரொட்டி, இத்தாலியப் பாடகர்
- செப்டம்பர் 21 - விஜயன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- நவம்பர் 2 - சு. ப. தமிழ்ச்செல்வன், விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்
- டிசம்பர் 27 - பெனசீர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - அல்பேர்ட் ஃபேர்ட், பீட்டர் குரூன்பேர்க்
- வேதியியல் - ஜெரார்ட் ஏர்ட்டில்
- மருத்துவம் - மரீயோ கப்பெச்சி, ஒலிவர் ஸ்மித்தீஸ், சேர் மார்ட்டின் எவான்ஸ்
- பொருளியல் - லியோனிட் ஹுர்விச், எரிக் மாஸ்கின், ரொஜர் மயேர்சன்
- இலக்கியம் - டொரிஸ் லெசிங்
- அமைதிக்கான நோபல் பரிசு - அல்பேர்ட் கோர், இளையவர், the United Nations Intergovernmental Panel on Climate Change
இவற்றையும் பார்க்கவும்
2007 நாட்காட்டி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- தமிழ் வலைப்பதிவர்கள் எழுதியது பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்