LabLynx Wiki
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1707 (MDCCVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
- ஜனவரி 1 - ஐந்தாம் ஜோன் போர்த்துக்கல்லின் மன்னனாக முடி சூடினான்.
- ஜனவரி 16 - ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து பேரரசுகளை இணைக்க ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
- ஜனவரி 9 - ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து பேரரசுகளை இணைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
- மே 1 - ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடாளுமறங்கள் இணைக்கப்பட்டன.
- ஜூன் 4 - ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினர்.[1].
- அக்டோபர் 22 - நான்கு பிரித்தானிய கடற்படைக் கப்பல்கள் சிலி தீவுகளில் மூழ்கியதில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 23 - பெரிய பிரித்தானியாவின் முதலாவது நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாயின.
- டிசம்பர் 16 - ஜப்பானின் பூஜி மலையின் கடைசி வெடிப்பு நிகழ்ந்தது.
- லாவோ முடிவுக்கு வந்தது.
- நாயக்கர் கண்டிப் பேரரசைக் கைப்பற்றினர்.
பிறப்புக்கள்
- ஏப்ரல் 15 - லியோனார்டு ஆய்லர், அறிவியல் அறிஞர் (இ. 1783)
- மே 23 - கரோலஸ் லின்னேயஸ், சுவீடன் அறிவியலாளர் (இ. 1778)
இறப்புக்கள்
- மார்ச் 3 - அவுரங்கசீப், முகலாயப் பேரரசன் (பி. 1618)
- இரண்டாம் விமலதர்மசூரியன், கண்டிப் பேரரசன்
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, Ceylon, 1923, (2ம் பதிப்பு: 2003) பக்.6