LabLynx Wiki
உள்ளடக்கம்
Appearance
<< | மார்ச் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
மார்ச்சு 27 (March 27) கிரிகோரியன் ஆண்டின் 86 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 87 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 279 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1309 – திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு வெனிசு நகரத்தில் உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கி தடை விதித்தார்.
- 1513 – நாடுகாண் பயணி யுவான் பொன்ஸ் டி லெயோன் புளோரிடாவிற்கு செல்லும் வழியில் பகாமாசின் வடக்கு முனையைச் சென்றடைந்தார்.
- 1625 – முதலாம் சார்லசு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மற்றும் அயர்லாந்து மன்னராக முடி சூடியதுடன், பிரான்சு மன்னனாகவும் தன்னை அறிவித்தார்.
- 1794 – அமெரிக்க அரசு நிரந்தரமான கடற்படையை அமைத்தது.
- 1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: மத்திய அலபாமாவில், அமெரிக்கப் படைகள் ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையில் கிரீக்குகளைத் தோற்கடித்தனர்.
- 1836 – டெக்சாசில் மெக்சிக்கோ இராணுவத்தினர் 342 டெக்சாசு போர்க்கைதிகளைக் கொன்றனர்.
- 1866 – அமெரிக்க அரசுத்தலைவர் ஆண்ட்ரூ ஜோன்சன் குடிசார் உரிமைகள் சட்டத்துக்கு தனது வீட்டோ உரிமை மூலம் தடை விதித்தார். ஆனாலும் அவரது வீட்டோவை அமெரிக்க சட்டமன்றம் நீக்கி சட்டமூலத்தை ஏப்ரல் 9 இல் நடைமுறைப்படுத்தியது.
- 1886 – அப்பாச்சி பழங்குடிப் போர்வீரர் யெரொனீமோ அமெரிக்க இராணுவத்திடம் சரணடைந்தார். அப்பாச்சி போர்கள் முடிவுக்கு வந்தது.
- 1890 – கென்டக்கியில் லூயிஸ்வில் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 76 பேர் உயிரிழந்தனர்.
- 1899 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: எமிலியோ அகுயினால்டோ மரிலாவோ ஆற்றில் நடந்த சமரில் பிலிப்பீனியப் படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டார்.
- 1915 – குடற்காய்ச்சல் நோய்க்கிருமிகள் தொற்றிய டைஃபாய்டு மேரி என்பவர் அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டார். இவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையில் கழித்தார்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவில் அச்சு அணி ஆதரவு அரசாங்கம் யுகோசுலாவிய வான்படையினரால் கவிழ்க்கப்பட்டது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: அலூசியன் தீவுகளில் அமெரிக்கக் கடற்படைக்கும் சப்பானுக்கும் இடையே சமர் ஆரம்பமானது.
- 1958 – நிக்கிட்டா குருசேவ் சோவியத் தலைமை அமைச்சரானார்.
- 1964 – வட அமெரிக்காவின் வரலாற்றில் அதி ஆற்றல் வாய்ந்த 9.2 ரிக்டர் நிலநடுக்கம் அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் உயிரிழந்தனர். ஏங்கரெஜ் நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.
- 1968 – விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் வானூர்தி விபத்தொன்றில் உயிரிழந்தார்.
- 1969 – நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
- 1970 – கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது.
- 1977 – அமெரிக்காவின் இரண்டு போயிங் 747 பயணிகள் விமானங்கள் கேனரி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் உயிரிழந்தனர். 61 பேர் மீட்கப்பட்டனர்.
- 1980 – நோர்வேயின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்று வட கடலில் விபத்துக்குள்ளாகியதில் 123 பேர் உயிரிழந்தனர்.
- 1981 – போலந்தில் சொலிடாரிட்டி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 12 மில்லியன் தொழிலாளர்கள் 4 மணி நேர பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- 1986 – ஆத்திரேலியா, மெல்பேர்ண் நகரில் காவல்துறை தலைமையகத்தின் முன்னால் வாகனக் குண்டு வெடித்ததில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டு, 21 பேர் காயமடைந்தனர்.
- 1990 – அமெரிக்கா காஸ்ட்ரோவிற்கு எதிரான கியூபாவிற்கான வானொலி பிரசார சேவையை ஆரம்பித்தது.
- 1993 – யான் சமீன் சீனாவின் அரசுத்தலைவரானார்.
- 1998 – அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆண்களின் விறைக்க முடியாமைக்கான சிகிச்சைக்காக வயாகராவை அனுமதித்தது.
- 1999 – அமெரிக்க லொக்கீட் எப்-117 நைட்கோக் விமானத்தை யுகோசுலாவியா சாம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியது.
- 2002 – இசுரேல், நத்தானியாவில் பாலத்தீனர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 29 பேர் கொல்லப்பட்டனர்.
- 2002 – பிரான்சு, நான்டேர் நகரில் நடைபெற்ற நகரசபைக் கூட்டம் ஒன்றை நோக்கி துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில், எட்டு நகரசபை உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர், 19 பேர் காயமடைந்தனர்.
- 2009 – இந்தோனேசியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.
- 2014 – பிலிப்பீன்சு அரசு மோரோ இசுலாமிய விடுதலை முன்னணிப் போராளிகளுடன் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தியது.
- 2016 – லாகூர், குல்சன்-இ-இக்பால் பூங்காவில் உயிர்ப்பு ஞாயிறு கொண்டாட்டத்தின் போது, தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 70 பேர் கொல்லப்பட்டு, 300 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
- 347 – ஜெரோம், உரோமை ஆயர், இறையியலாளர், மொழிபெயர்ப்பாளர் (இ. 420)
- 1845 – வில்லெம் ரோண்ட்கன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1923)
- 1847 – ஓட்டோ வாலெக், நோபல் பரிசு பெற்ற யூத-செருமானிய வேதியியலாளர் (இ. 1931)
- 1886 – லுட்விக் மீஸ் வான் டெர் ரோ, செருமானிய-அமெரிகக் கட்டிடக் கலைஞர் (இ. 1969)
- 1892 – சுவாமி விபுலாநந்தர், யாழ் நூல் எழுதிய ஈழத்து தமிழறிஞர், கவிஞர், இறையியலாளர் (இ. 1947)
- 1899 – குளோரியா சுவான்சன், அமெரிக்க நடிகை, தயாரிப்பாளர் (இ. 1983)
- 1910 – அய் ஜிங், சீனக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1996)
- 1945 – ஜெரால்ட் ஜே. டோலன், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2008)
- 1948 – எம். கே. முருகானந்தன், ஈழத்து எழுத்தாளர், மருத்துவர்
- 1955 – மாரியானோ ரஜோய், எசுப்பானியாவின் பிரதமர்
- 1955 – முல்லையூரான், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2006)
- 1963 – குவெண்டின் டேரண்டினோ, அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்
- 1985 – ராம் சரண், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1988 – கம்சாயினி குணரத்தினம், இலங்கை-நோர்வே அரசியல்வாதி
இறப்புகள்
- 1378 – பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1336)
- 1625 – முதலாம் யேம்சு, ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் (பி. 1566)
- 1898 – சையது அகமது கான், இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி, இதழாளர், இசுலாமிய சீர்திருத்தவாதி (பி. 1817)
- 1952 – கீச்சிரோ டொயோடா, சப்பானியத் தொழிலதிபர் (பி. 1894)
- 1968 – யூரி ககாரின், உருசிய விண்வெளி வீரர் (பி. 1934)
- 1982 – பச்லுர் ரகுமான் கான், வங்காளதேச-அமெரிக்க கட்டிடக் கலைஞர் (பி. 1929)
- 1996 – கள்ளபார்ட் நடராஜன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1926)
- 1998 – டேவிட் மெக்லிலேண்ட், அமெரிக்க உளவியலாளர் (பி. 1917)
- 2005 – ரஞ்சன் ராய் டேனியல், இந்திய இயற்பியலாளர் (பி. 1923)