IHE Wiki
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1864 (MDCCCLXIV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும், (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்).[1][2][3]
நிகழ்வுகள்
- பெப்ரவரி 1 - டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது.
- ஏப்ரல் 8 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானாவில் மான்ஸ்ஃபீல்ட் என்ற இடத்தில் கூட்டமைப்பு படைகள் கூட்டுப் படைகளை தோற்கடித்தன.
- ஆகஸ்ட் 22 - ஜெனீவாவில் செஞ்சிலுவைச் சங்கம் உருவாக்கப்பட்டது.
- அக்டோபர் 5 – கல்கத்தாவில் நிகழ்ந்த சூறாவளியில் 70,000 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 31 - நெவாடா ஐக்கிய அமெரிக்காவுடன் 36வது மாநிலமாக இணைந்து கொண்டது.
- டிசம்பர் 27 - இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
நாள் அறியப்படாதவை
- ஜனவரி - முதலாவது தொடருந்து இயந்திரம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது.
- பெப்ரவரி 1 - டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பம்.
- ஏப்ரல் - இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது நீராவிப் படகு கொமெற் (Comet) யாழ்ப்பாண வாவியில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
- இலங்கையில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட 120 தொழிலாளர்கள் அடங்கிய "ஆதிலெட்சுமி" என்ற நீராவிக்கப்பல் கடலில் கவிழ்ந்ததில் ஏழுபேரும் பதினைந்து மாலுமிகள் மட்டுமே உயிர்தப்பினர்.
- இலங்கையில் நிலங்களைப் பதியும் சட்டம் (Land Registration) அறிமுகப்படுத்தப்பட்டது.
- தத்துவ போதினி என்ற தமிழ் மாதிகை வெளிவந்தது.
- ஆறுமுக நாவலர் தமிழ்நாடு சிதம்பரத்தில் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஆரம்பித்தார்.
பிறப்புகள்
- ஏப்ரல் 21 - மக்ஸ் வெபர், ஜெர்மனிய சமூகவியலாளர் (இ. 1920)
- செப்டம்பர் 17 - அனகாரிக தர்மபால, பௌத்த துறவி (இ. 1933)
இறப்புகள்
1864 நாட்காட்டி
மேற்கோள்கள்
- ↑ Bjørn, Claus; Due-Nielsen, Carsten (2006). Dansk Udenrigspolitiks Historie. Vol. III, Fra Helstat til Nationalstat, 1814–1914 (in டேனிஷ்) (2nd ed.). Copenhagen: Gyldendal. pp. 238–39.
- ↑ Chaffin, Tom (2008). The H. L. Hunley: the Secret Hope of the Confederacy. New York: Hill and Wang. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8090-9512-4.
- ↑ Hurwitz, David (2010). Petite Messe solennelle (Works of Gioachino Rossini, Vol. 3) (PDF). classicstoday.com.