Clinfowiki
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
ஆண்டு 1788 (MDCCLXXXVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 1 - த டைம்ஸ் நாளிதழ் லண்டனில் வெளிவர ஆரம்பித்தது.
- ஜனவரி 18 - இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்தது.
- ஜனவரி 26 - ஆஸ்திரேலியா நாள்: சேர் ஆர்தர் பிலிப் தலைமையில் 11 கப்பல்களில் ஆங்கிலேயக் கைதிகள் சிட்னியை வந்தடைந்தனர். முதலாவது கைதிகள் குடியேற்ற பிரதேசம் அவுஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது.
- பெப்ரவரி 1 - ஐசாக் பிரிக்ஸ், பில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்கள்.
- பெப்ரவரி 17 - லெப்டினண்ட் போல் (Ball) என்பவன் சிட்னியில் இருந்து நோர்போல்க் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான்.
- மார்ச் 21 - லூசியானாவின் நியூ ஓலியன்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் 25 விழுக்காடு நகர மக்கள் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 11 - ரஷ்ய ரஷ்ய நாடுகாண் பயணி கெராசிம் இஸ்மாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.
- அக்டோபர் 1 - நியூவென் ஹியூ வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.
நாள் குறிப்பிடப்படாதவை
பிறப்புக்கள்
- சனவரி 22 - ஜார்ஜ் கோர்டன் பைரன் ஒரு ஆங்கில-ஸ்கொட்டியக் கவிஞரும், புனைவிய (Romanticism) இயக்கத்தின் முக்கியமானவர்களில் ஒருவர். (இ. 1824)
- மே 10 - அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் (Augustin-Jean Fresnel) ஒரு பிரான்சிய இயற்பியலாளர். (இ. 1827)
- ஜூன் 15 - ஜான் சல்லிவன் (John Sullivan) 1815 முதல் 1830 வரை அன்றைய பிரித்தானிய அரசின் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். (இ. 1855)
- ஒகஸ்டஸ் சீபே ஜேர்மனில் பிறந்த பிருத்தானிய பொறியியளாளர். (இ. 1872)
இறப்புக்கள்
- அருணாசலக் கவிராயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1711)
1788 நாட்காட்டி
மேற்கோள்கள்
- ↑ Steinberg, S. H. (2017). Five Hundred Years of Printing (in ஆங்கிலம்). Courier Dover Publications. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780486814452.
- ↑ Harper's Encyclopaedia of United States History from 458 A. D. to 1909, ed. by Benson John Lossing and, Woodrow Wilson (Harper & Brothers, 1910) p167
- ↑ Morison, Samuel Eliot (1944-05-22). "The Gilberts & Marshalls: A distinguished historian recalls the past of two recently captured Pacific groups". Life. pp. 91–101. பார்க்கப்பட்ட நாள் 2011-12-14.