Clinfowiki
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1900 (MCM) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு விதிவிலக்கான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 8 - அலாஸ்கா இராணுவ ஆட்சியின் கீழ் வந்தது.
- பெப்ரவரி 9 - இலங்கையிலும் இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
- பெப்ரவரி 9 - ட்வைட் டேவிஸ் என்பவர் டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டிகளை ஆரம்பித்தார்.
- பெப்ரவரி 14 - போவர் போர்: தென்னாபிரிக்காவில் 20,000 பிரித்தானியப் படைகள் ஒரேஞ்ச் சுயாதீன மாநிலத்தைத் தாக்கினர்.
- பெப்ரவரி 22 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பிரிவானது.
- பெப்ரவரி 27 - பிரித்தானிய தொழிற் கட்சி அமைக்கப்பட்டது.
- மே 31 - பிரித்தானியா ரொபேர்ட் பிரபு தலைமையில் ஜொஹான்னர்ஸ்பேர்க்கைக் கைப்பற்றியட்து.
- ஜூன் 5 - போவர் போர்: பிரித்தானியர் தென்னாபிரிக்காவின் பிரிட்டோறியாவைக் கைப்பற்றினர்.
- ஜூன் 20 - பொக்சர் படைகள் பீக்கிங்கில் நூற்றுக்கணக்கான ஐரோப்பியர்களைக் கொன்றனர்.
- ஜூலை 5 - ஆஸ்திரேலியப் பொதுநலவாய சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- ஜூலை 9 - ஆஸ்திரேலியப் பொதுநலவாய சட்டம் விக்டோரியா மகாராணியால் ஏற்றுக் கொள்லப்பட்டது.
- ஜூலை 19 - பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.
- ஜூலை 29 - இத்தாலிய மன்னன் முதலாம் உம்பேர்ட்டோ கொலை செய்யப்பட்டான்.
- செப்டம்பர் 8 - சூறாவளி கால்வெஸ்டன் டெக்சாசைத் தாக்கியதில் 8,000 பேர் கொல்லப்பட்டனர்.
மக்கள் தொகை
- மொத்தம்: 1,650,000,000
- ஆபிரிக்கா: 133,000,000
- ஆசியா: 947,000,000
- ஐரோப்பா: 408,000,000
- இலத்தீன் அமெரிக்கா: 74,000,000
- வட அமெரிக்கா: 82,000,000
- ஓசியானியா: 6,000,000
பிறப்புகள்
- சூன் 25 - மவுண்ட்பேட்டன் பிரபு, பிரித்தானிய இந்தியாவின் கடைசி பிரித்தானிய அரசுப் பிரதிநிதி (இ: 1979)