FAIR and interactive data graphics from a scientific knowledge graph
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2021 ஆம் ஆண்டு (MMXXI) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின்படி வெள்ளிக் கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2021-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 21-ஆவது ஆண்டாகும் மற்றும் 21-ஆம் நூற்றாண்டின் 21-ஆவது ஆண்டாகும். அத்துடன் இது 2020களின் இரண்டாவதுமான ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- சனவரி 9 - சிறீவிஜயா வானூர்தி 182 இந்தோனேசியாவில் ஜகார்த்தா நகரின் வடக்கே வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 62 பேரும் உயிரிழந்தனர்.
- பிப்ரவரி 19 - பெர்சீவியரன்சு தரையுளவி, இஞ்சினுவிட்டி உலங்கு வானூர்தி ஆகியவற்றைக் கொண்ட நாசாவின் செவ்வாய் 2020 திட்ட விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய்க் கோளில் தரையிறங்கியது.
- பிப்ரவரி 26 - இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.
- மார்ச் 23 - உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் ஒன்று சூயசு கால்வாயில் தரை தட்டியதால் அதனூடான கப்பல் போக்குவரத்து தடைப்பட்டது.
எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள்
திகதிகள் தெரியவில்லை
- கிறீன்லாந்து தனியான சுதந்திர நாடாகலாம் [1]
மேற்கோள்கள்
- ↑ "Dismantling Empires Through Devolution". The Atlantic. 26 September 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.