LIMSwiki
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1711 (MDCCXI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
- ஜனவரி 16 - கோவாவில் பிறந்து இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த குருவானவர் யோசப் வாஸ் அடிகள் கண்டியில் இறந்தார்.
- பெப்ரவரி - முதலாவது மார்டி கிரா ஊர்வலம் அமெரிக்காவில் அலபாமாவில் பிரெஞ்சுக் குடியேறிகளால் நடத்தப்பட்டது.
- ஜூன் 6 - யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகள் நடத்துவதற்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.
- செப்டம்பர் 22 - டஸ்கரோரா ஆதிகுடிகள் வட கரோலினாவில் பாம்லிக்கோ ஆற்றுப் படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர்.
- அக்டோபர் 14 - யோஸ்டொஸ் என்பவன் டெவோஃபுளொஸ் என்பவனைக் கொன்று எதியோப்பியாவின் மன்னனாக முடி சூடினான்.
நாள் அறியப்படாதவை
- ஜோன் ஷோர் tuning fork ஐக் கண்டுபிடித்தார்.
பிறப்புக்கள்
- பெப்ரீசியஸ் முதல் தமிழ்-ஆங்கில அகராதி தொகுத்தவர் (இ. 1791)
இறப்புக்கள்
- சனவரி 16 - ஜோசப் வாஸ் அடிகள், (பி. 1651)